காஞ்சீபுரம் காமாட்சியம்மன் அம்மன் காலனி, பார்த்தசாரதி தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மின்கம்பம் ஒன்று ஆபத்தான வகையில் தெருவின் மையத்தில் வளைந்தநிலையில் வாகனஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் வாகனங்கள் அப்பகுதியில் சரிவர செல்ல முடிவதில்லை. இந்த பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால் மாணவ-மாணவிகளும் சிரமத்துடனே கடக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.