திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நத்தமேடு பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 72 செண்ட் சுடுகாடு இடம் சுற்றுச்சுவர் இல்லாமல் புதர் மண்டி பராமரிப்பின்றி கிடக்கிறது. மழைக்காலங்களில் இந்த இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை இங்கு புதைக்க முடியவில்லை. இதனால் இறப்பவர்களின் உடல்களை இந்த இடத்தில் புதைக்க முடியாமல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நத்தமேடு பெரிய ஏரி கரை ஓரங்களில் புதைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.