சென்னை திரு.வி.க.நகர் மேட்டுப்பாளையம், செங்கன் தெருவில் சென்னை மாநகராட்சி உடற்பயிற்சி கூடம் பழுதடைந்து, மின்சார வசதி இல்லாமல் உள்ளது. இதனால் காலை உடற்பயிற்சி செய்ய முடியாமல் இளைஞர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடற்பயிற்சி கூடத்தை சரி செய்து தர வேண்டும் என்பது அப்பகுதி இளைஞர்களின் கோரிக்கையாகும்.