திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீகேட்டை ஏற்படுத்துவதாக 'தினத்த்ந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் குப்பைகள் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் துணைநின்ற 'தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.