காஞ்சீபுரம் மாவட்டம் அடுத்துள்ள குளக்கரை மாரியம்மன் திருக்கோவில் அருகே உள்ள நிழற்குடையில் பயணிகள் அமர எந்த வசதியும் இல்லை. இதனால் முதியவர்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அங்கு பயணிகள் அமர்வதற்கு ஏற்ற வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் வழி வகை செய்ய வேண்டும்.