திருவள்ளூர் மாவட்டம் மணப்பாக்கம் மெயின் ரோடு இராணுவ அலுவலக விடுதி அருகே கோரி நகரில் உள்ள சாலை மோசமாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே குழிகள் விழுந்தும் பள்ளமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். மேலும் மழை காலத்தில் சேரும் சகதியுமாகவும், வெயில் காலத்தில் புழுதி மிகுந்த பகுதியாகவும் காணப்படுகிறது. இதற்கு விடிவு காலம் பிறக்குமா?