திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி - கார்த்திகேயபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதி சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பள்ளத்தை மறைத்து விடுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள், பள்ளம் இருப்பது தெரியாமலே விபத்துக்கு உள்ளாகின்றனர். உயிர்சேதம் எதுவும் ஏற்படும் முன்பு கவனிக்கப்படுமா?