திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி லட்சுமிபுரம் மெயின் ரோடு சீனிவாச நகர் 4-வது தெருவில் உள்ள சாலையின் ஒரு பகுதி பள்ளமாக இருக்கிறது. இதனால் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் இதில் நடந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும், டெங்கு போன்ற நோய் தொற்று பரவுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழை நீர் கால்வாய் அமைக்க வழி செய்ய வேண்டும்.