உத்திரமேரூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு அகரம்தூளி செல்லும் (தடம் எண் 89 ஏ) பஸ்சானது பெரும்பாலான நாட்களில் இயக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் (டி68 மற்றும் டி 68 எல்.எஸ்.எஸ்) பஸ்கள் தடம் மாற்றி அகரம்தூளிக்கு அனுப்ப படுகின்றன. இதனால் மாலை நேரங்களில் செங்கல்பட்டுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே 89 ஏ பஸ்சை தடம் மாற்றாமல் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.