செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கூட்ரோடு சந்திப்பில் மூன்று திசைகளிலும் வாகனங்கள் வேகமாக வந்து நினைத்தப்படி தாறுமாறாக திரும்பி செல்கின்றன. இதனால் பாதசாரிகள் பாதையை கடக்க மிகவும் சிரமமாக உள்ளது. ஏதேனும் பெரும் விபத்து ஏற்படும் முன் போக்குவரத்து துறை அதிகாரிகள் சிக்னல் விளக்குகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.