குரங்குகள் அட்டகாசம்.!!

Update: 2022-10-05 14:57 GMT

செங்கல்பட்டு மாவட்டம் இலுப்பைத் தோப்பு பகுதியில் உள்ள இராகவனார் தெருவில் நீண்ட நாட்களாக குரங்குத் தொல்லை இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தெருவில் நடந்து செல்வதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் உணவு பொருட்களை எடுத்து செல்லும் போது குரங்கு விடாமல் துரத்தி வருகிறது, சில நேரங்களில் பொதுமக்களை தாக்கி சிறு காயங்களை ஏற்படுத்துகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சமப்ந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்