சென்னை அடையாறு இந்திரா நகர் 11 வது சந்து பகுதியில், அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால்வாய் பணி பாதியில் நிற்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் வடிகால்வாய் பிரச்சினை சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.