பெயர் பலகை வேண்டும்

Update: 2026-01-25 12:42 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வசந்தம் நகரில் லோட்டஸ் தெரு உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவிற்கு பெயர் பலகை இல்லை. இதனால் இங்கு வரும் மக்கள் வழி தெரியாமல் செல்கின்றனர். மேலும் தபால், உணவு டெலிவரி ஊழியர்களும் பெயர் தெரியாமல் தவிக்கின்றனர். எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் இந்த தெருவிற்கு பெயர் பலகை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்