நேரம் தவறும் அரசு பஸ்

Update: 2026-01-25 12:46 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், மேத்தா நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள் தடம் எண் 66 பஸ்சினை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த பஸ் சரியான நேரத்தில் வருவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தடம் எண் 66 பஸ்சினை சரியாக இயக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்