நாய்கள் தொல்லை

Update: 2022-09-30 13:47 GMT


மயிலாடுதுறை நகரில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அருகில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி கடிக்கின்றன . இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை நாய்கள் துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும் செய்திகள்