திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட சின்னகளக்காட்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சரியாக பராமரிப்பில்லாமல், ஆங்காங்கே செடி,கொடிகள் வளர்ந்து புதர்போல காட்சியளிக்கிறது. இதனால் விஷ உயிரினங்கள் வரும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குழந்தைகளின் நலனை பாதுகாக்கவேண்டும்.