திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் பஸ் நிறுத்தத்தில், தினமும் ஏராளாமான பயணிகள் பஸ் ஏற வந்து செல்கின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள, இருக்கைகள் சேதமடைந்து உள்ளன. பயணிகள் உட்கார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.