செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராம் செங்கழுநீர் ஓடை பகுதியில் தெரு விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மையான நிலை உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் தெரு விளக்குகள் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.