திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, லாசர் நகர் 5-வது குறுக்குத்தெருவில் உள்ள பூங்கா அருகே செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. அதன் அருகில் உள்ள மின்கம்பம் மற்றும் மின்மாற்றியில் அதிக அளவில் செடி, கொடிகள் படர்ந்து உள்ளன. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுதற்குள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.