செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் பகுதியில், ஏராளமான சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.