திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதீசுவரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கோவிலின் குளத்தில் வீசப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.