சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள சமூக நலக்கூடம் அருகே சாலையில் கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறுபோல ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.