சென்னை புழுதிவாக்கம், மகேஸ்வரி அவன்யூ என்ற தெருவில் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மழை காலம் நெருங்கி வருவதால் மழை கால்வாயில் அடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் மழை நீர் வெளியேற முடியாத சூழல் ஏற்படும் என்பதால் விரைவில் மழைநீர் வடிகால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.