திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அத்திமாஞ்சேரி பேட்டையில் இருந்து பொதட்டூர் பேட்டைக்கு செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலை திருப்பங்களில் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். சாலை திருப்பங்களில் எதிரே வரும் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்துக்களும் ஏற்படுகின்றன. இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வழி செய்ய வேண்டும்.