தஞ்சை எம்.கே. மூப்பனார் சாலையிலிருந்து செல்லும் வழியில் புது ஆற்றுப்பாலம் அருகே சிவா-விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவிலுக்கு அருகே இரவு நேரத்தில் ஏராளமான இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் இளம் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே காவல் துறையினர் புது ஆற்றுப்பாலம் இரு கரைகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு திறந்த வெளி பாராக செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.