காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பாலாண்டீஸ்வரர் கோவில் தெரு பின்புறம் இருக்கும் மீனாட்சி நகர் பூங்கா பராமரிப்பில்லாமல் உள்ளது. இந்த பூங்காவில் உள்ள கழிப்பறையில் குப்பைகள் சேர்ந்தும், கற்கள் குவிக்கப்பட்டும் மோசமாக காட்சி தருகிறது. மேலும் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகாரணங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பூங்காவைல் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டுகிறோம்.