டாஸ்மாக் கடை மாற்றப்படுமா?

Update: 2022-09-14 12:42 GMT

நாகை மாவட்டம் எட்டுக்குடி ஊராட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இதன் அருகிலேயே அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இதனால் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்காரணமாக மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை 

மேலும் செய்திகள்