பெருமாள் பட்டு பகுதியில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தை கடந்து தான் சி.டி.எச் சாலைக்குசெல்ல முடியும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது வரை முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் அமைகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் மேம்பால பணியை முடித்து தர வேண்டும்.