திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பிரதான சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை இருளில் மூழ்கி இருப்பது தொடர்பான செய்தி தினத்தந்தி புகார் பேட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதையடுத்து செயல் அலுவலர் உடனடியாக செயல்பட்டு காந்தி சிலைக்கு புதிய மின் விளக்கை ஏற்பாடு செய்து மகாத்மா காந்தி சிலை இரவிலும் பளிச்சென்று தெரியும்படி ஏற்பாடு செய்தார். உடனடியாக செயல்பட்ட ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.