திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் வெங்கடேஷ்வரா கூட்டுறவு வங்கியில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அதிக மக்கள் தொகை உள்ள ஊர் என்பதால் ஒரு இ-சேவை மையம் போதுமானதாக இல்லை. மேலும் இந்த ஒரு இ-சேவை மையமும் வாரத்தில் இரண்டு நாட்கள் மாட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் ஏதவதொரு காரணத்தினால் இ-சேவை மையம் செயல்படுவதில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி பொதட்டூர்பேட்டையில் இன்னொரு இ-சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.