தீர்வு கிடைக்குமா?

Update: 2022-08-19 14:37 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகால தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம். இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை அனைத்தும் எந்தவித கட்டணமும் இல்லாமல் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆனால் பரிசோதனையை இலவசமாக செய்யயாமல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இருக்கும் இரத்த பரிசோதனை நிலையத்திற்கு பரிந்துரை செய்து கமிஷன் பெற்று வருகிறார்கள். கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்