இடையூறாகும் ஆட்டோக்கள்

Update: 2022-08-18 14:22 GMT

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை, அரக்கோணம் பகுதிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகிறார்கள். ஆனால் ரெயில் நிலையத்தின் வெளிப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சாலையை மறித்தவாறு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறார்கள். இதன் காரணமாக திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் தினந்தோறும் அவதிப்பட்டு செல்கிறார்கள். எனவே திருவள்ளூரில் நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்