காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் குன்றத்தூர் மெயின் ரோடு அம்பாள் நகர் மெயின் ரோட்டில் சாலையின் அருகே ஆபத்தான வகையில் மின்கம்பம் அமைந்துள்ளது. செடி கொடிகள் மின்கம்பம் முழுவதும் படர்ந்து உள்ளது, மேலும் மின்கம்பம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமனாலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் இருந்துவருகிறது. அப்பகுதியில் செல்லும் பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பு ஏற்படுத்துவதற்கு முன் அதிகாரிகள் மின்கம்பத்தை அப்புரப்படுத்த வேண்டும்.