திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரத்திலிருந்து திருவாலங்காடு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள வீரராகவபுரம் அருகே நெடுஞ்சாலை ஒரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.