அலட்சியம் வேண்டாமே

Update: 2022-08-17 14:15 GMT

மாதவரம் மூலச்சத்திரம், மீனாட்சி பாரதி கோ-ஆப்பரேட்டிவ் நகர் 2-ஆம் பகுதியில் உள்ள மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டியின் மின்சார கேபிள்கள் பூமிக்கு உள்ளே புதைக்கப்படாமல் சாலை மேலேயே போடப்பட்டுள்ளது. மழை காலம் வர இருப்பதால், இதே நிலை தொடரும் பட்சத்தில் மின் கசிவு ஏற்பட்டு விபரீதங்கள் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. மக்களின் அச்சத்தை போக்க, மின்சார கேபிள்களை பூமிக்குள் புதைப்பதற்கு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்