திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவலாங்காடு பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் உள்ள சின்னகளக்காட்டூர் கிராமத்தில் சாலை வசதி இல்லாமல் இருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. சம்பந்தபட்ட துறை அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் அந்த பகுதியில் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.