நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்கள் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் தெரு நாய்கள் கூட்டமாக சென்று சிறுவர்கள், நடைபயிற்சி செல்பவர்களை கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,கீழ்வேளூர்.