திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்தில் உள்ள அண்ணனூரில் ராமர் கோவில் அருகே மின்கம்பம் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை சுற்றி கழிவுநீர் ஓடுகிறது. மேலும் மின்கம்பம் மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி பாதுகாப்பான இடத்தில் அமைக்கவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.