பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) எழுபத்தெட்டு ஏரியா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருவிளக்குகள் பெரும்பாலும் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக காட்டுயானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.