விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் புல்லக்கவுண்டன்பட்டி கிராமத்தில் வல்லம்பட்டி மின்மாற்றியில் இருந்து குறைந்த அளவு மின்சாரம் வினிேயாகிக்கப்படுகிறது. சில நேரங்களில் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராம பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடு்ப்பார்களா?