பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஊராட்சியில், அரியலூர் - பெரம்பலூர் முக்கியச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. தெருவிளக்குகள் நீண்ட நாட்களாகப் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவதோடு, பொதுமக்கள் நடந்து செல்லவும் அச்சப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாகச் சீரமைத்து ஒளியூட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.