சேலம் அழகாபுரம் பெரியபுதூர், மதுரா கார்டன் பகுதியில் தெருவிளக்கு 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.