பொதுமக்கள் அவதி

Update: 2026-06-21 11:29 GMT

அரியலூர் மாவட்டம் மணக்கால் ஊராட்சி சுப்புராயபுரம் கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொது மயானத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் உடல்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இரவு நேரங்களில் எவ்வித சிரமமும் இன்றி இறுதிச்சடங்குகளைச் செய்ய ஏதுவாக, மயானப் பகுதியில் புதிதாக இரண்டு மின்கம்பங்களை அமைத்து மின்விளக்குகள் பொருத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மின்தடை