அரக்கோணம் -சோளிங்கர் ரோடு மற்றும் திருத்தணி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்களில் மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியன் வெள்ளை கோடும் இரவு நேர பிரதிபலிப்பான்களும் இல்லாததால் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. விபத்துகளை தடுக்க மின்விளக்குகள் மற்றும் பிரதிபலிப்பான்கள் அமைக்க மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைதுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசன், அரக்கோணம்.