ஆபத்தான மின்பெட்டி

Update: 2026-03-15 12:50 GMT

சென்னை கொடுங்கையூர் யூனியன் கார்பைட் காலனி 5-வது தெருவில் அதிக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்பெட்டி சேதமடைந்த மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அதன் மின்வயர்கள் வெளியே தெரியும்படியாக உள்ளன. குழந்தைகள் விளையாடும் அந்த பகுதியில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள் கிடப்பதால் பெற்றோர்கள் அச்சத்துடனே உள்ளனர். எனேவ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்பெட்டியை சீரமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்