சோளிங்கர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், தங்க நகைகள், துணிகள் வாங்க நகரில் உள்ள பஜாருக்கு வருகின்றனர். அங்கு கிராம நிர்வாக அலுவலகம்- தர்மாரெட்டி தெருவுக்கு இடையே ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. அந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமையன், சோளிங்கர்.