சேத்தியாத்தோப்பில் வெள்ளாறு அணைக்கட்டு மீது உள்ள மின்விளக்குகள் பராமரிப்புகள் இன்றி முற்றிலும் பழுதடைந்துள்ளது. இதனால் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவு நேரத்தில் அணைக்கட்டு வழியே செல்லும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.