நந்தியாறு பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2026-08-02 17:55 GMT

சோளிங்கர்-திருத்தணி சாலையில் நந்தியாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள், பொதுமக்களின் நலன் கருதி சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சோலார் மின்விளக்குகள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஒளிராமல் இருப்பதால், மேம்பாலப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் மேம்பாலத்தை கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். சோலார் மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவதாஸ், சோளிங்கர்.

மேலும் செய்திகள்