கோவில்களில் மின்விளக்கு எரியவில்லை

Update: 2026-08-02 15:25 GMT

சேலம் மாநகரத்தில் மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதத்தையொட்டி அதிகாலையில் திருமணமாகாத பெண்கள் அம்மனுக்கு தண்ணீர் ஊற்றி வணங்குவது வழக்கம். ஆனால் மாநகரில் உள்ள கோவில்களில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் பெண்கள் அச்சத்துடனே கோவிலுக்கு வந்து செல்கின்றனர். எனவே பெண்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கோவில்களில் மின்விளக்குகள் எரிய செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்