புதுப்பேட்டை முத்து மாரியம்மன் கோவில் அருகே சாலையோரம் உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் மின்கம்பம் மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.